Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

புல்மோட்டையில் ஆணொருவரின் சடலம் மீட்பு


திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை -ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீற்கப்பட்டுள்ளது.


இச்சடலம் இன்று (12)  கரையொதுங்கியதாகவும் தெரியவருகின்றது.

வெள்ளை நிறத்தில் கட்டகை சேட் அணிந்துள்ளதாகவும், 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரியவருகின்றது.

யாருடைய சடலம் என்பது பற்றிய விபரம்  இன்னும் தெரியவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கரையொதுங்கிய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments