Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று!

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில்  ஏழு மாத குழந்தை உட்பட 13 பேர் புதிதாக இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

இன்று (08) வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்  கடந்த 4ஆம் திகதி 106 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் ஜமாலியா- சிறிமாபுர,ஜயவிக்ரமபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 7 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  பிராந்திய சுகாதார பணிப்பாளர் வீ.பிரேமானந் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 20 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் படி நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,
வெளிமாவட்டங்களில் இருந்து மூதூர் பிரதேசத்துக்கு வருகை தந்த 40 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

இதேவேளை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பில் இருந்து வீட்டுக்கு விடுமுறைக்காக வருகை தந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் திருமலையில் 16 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் 46  பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் கூறினார்.

No comments