(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கோட்ட பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை நகர்ப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் ஊடக செயலாளர் றுச்சிற டிலான் மதுசங்க
அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார்.
No comments