Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலையில் கைக்குண்டுக்கு மீட்பு!

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் 5 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைக்குண்டுஙள் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட கைக்குண்டு களை திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கைக்குண்டுகள் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது எனவும் சேருவில போலீசார் தெரிவித்தனர்.




No comments