கிண்ணியா பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி செளபாக்கியா திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (10) கிண்ணியா சமுர்த்தி வங்கி காரியலயத்தில் வைத்து வழங்கப்பட்டது
கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி தலைமையில் இன்று (10) நடைபெற்றது.
இதன் போது சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.மூஹ்ஸின், கிண்ணியா சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.வி.ஹில்மி கிண்ணியா சமுர்த்தி வங்கி பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தனர்
ஒரு கிராம உத்தியோக்தார் பிரிவில் 16 சமுர்த்திப் பயனாளிகள் வீதம், 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மொத்தமாக 496 சமுர்த்தி பயனாளிகளுக்கு ஒருவருக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 992 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டவுள்ளது
No comments