Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை மாவட்டத்தில் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது

 




திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்நிலை பிரதேசங்கள், வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.


திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் கன்னியா,வரோதயநகர், புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


இதேபோல் தம்பலகாமம்- கிண்ணியா முள்ளிப்பொத்தானை-வெருகல் போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் வீசப்பட்ட நெல் விதைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி,இறக்கக்கண்டி, வாழையூற்று போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களான ஜமாலியா மற்றும்துளசி புறம் பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


அத்துடன் தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments