திருகோணமலை-விளாங்குளம் கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு ஹெல்தி லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் ஹார்ட் சிலோன் பவுண்டேஷன் நிறுவனத்தினால் இன்று (16) அவ்வமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டொக்டர் என். ரவிச்சந்திரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது டொக்டர் ரவிசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்-கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பரீட்சார்த்த செயற்திட்டம் எனவும் இது வெற்றியளிக்கும் பட்சத்தில் மேலும் பல கிராமங்களுக்கு இச் செயற்திட்டத்தினை விஸ்தரிக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திருமதி கருணைமணி ரவிச்சந்திரன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரெட்ணானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments