(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ஜமாலியா பகுதியில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இத்தகவலை அவர் இன்றிரவு (21) 8.45 மணியளவில் தெரிவித்தார்.
இறைச்சி கடையுடன் தொடர்புடைய குறித்த நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஜமாலியா பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15 பேர் இனங்காணப்பட்ட நிலையில் இன்று (21) திங்கட்கிழமை 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக இன்று வரைக்கும் 47 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 778 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் 27654 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
No comments