(அப்துல்சலாம் யாசீம்)
இலங்கைக்கான ஆப்கனிஸ்தான் நாட்டின் தூதுவர் அஷ்ரப் எம் ஹைதரி அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஆப்கனிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக கிழக்கில் முன்னெடுக்கப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவருவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தூதுவர் கிழக்கில் முன்னெசுக்கப்படும் வியாபார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்தும் விசேடமாக இலங்கை அரசினால் யுத்தத்திற்கு பின்னராக முன்னெடுக்கப்படும் சமாதான மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ஆப்கான் நாட்டில் தற்போது நிலவி வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழித்து சமாதானத்தை கட்டியெழுப்ப இலங்கை அரசினால் வழங்கப்படக்கூடிய ஆலோசனைகள் குறித்து ஆரயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
No comments