சர்வதேச மாற்றத்திறனாளிகள் தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று சேருவல சஹன செவன மத்திய நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் அபரிதமானதென்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பல உதவிகளை வழங்கிவருவதாகவும் கிழக்கு மாகாணசபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்த செயற்பாடுகளை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ். கே.டி. நெரன்ஞன் , மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினி உட்பட மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
No comments