(அப்துல்சலாம் யாசீம்)
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லவேர்டு அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது பிரான்ஸ் நாடு இலங்கையில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி தொடர் பில் நீண்ட நேரமாக உரையாடப்பட்டது. குறிப்பாக நீர்ப் பாசனம் தொடர்பாக பிரான்ஸ் நாடு மேற்கொண்டு வரும் செயற்திட்டத்தில் உயிர் பல்வகைமை சூழல் பாதுகாப்பு பற் றியும் பேசப்பட்டது .
மற்றும் மட்டகளப்பு கிழக்கு பல்கலைகழகம் அபிவிருத்தி தொடர்பாகவும் . அதே போல் மட்ட களப்பில் முருகல் நிலையை ஏற்படுத்தியுள்ள பண்ணையாளர்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப் பாக கூட்டுறவு பண்ணையார் என்று அவர்களை ஒன்று திரட்டி பால் உற்பத்தி ெதாழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.
திருமலை துறைமுகத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கான நேரடி துறைமுக மற்றும் விமான சேவைகள் ஏற்பாடு போன்றவற்றை எதிர்காலத்தில் திட்டம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் ..
கோரோனா அச்சுறுத்தலுக்கும் பின்பு சுமூகமான நிலை ஏற்பட்டதன் பின் எமது நாட்டின் உடனான மேலதிக நட்புறவு ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments