Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

மலிபன் பால்மா நிறுவனத்தின் விற்பனை ஊழியர்களின் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வருடாந்த வெற்றியாளர்கள் வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு!

 


லங்கையின் முதல்தர பால்மா இறக்குமதி மற்றும் உற்பத்தி நிறுவனமான மலிபன் பால்மா நிறுவனத்தின் வருடாந்த விற்பனை ஊழியர்களின் போட்டியில் (Annual Sales Competition) அகில இலங்கை ரீதியில் வெற்றியாளர்கள் வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனை தலைமை அதிகாரி திரு.அனுருத்த மல்லிகாராச்சி (Mr.Annurudda Mallikarachi) அவர்கள் தெரிவித்துள்ளார்


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் 

இலங்கை மக்களின் நன்மதிப்பை வென்ற மலிபன் நிறுவனம் கடந்த 60வருடங்களுக்கு மேலாக மிகச்சிறந்த உற்பத்திகளை நம்பிக்கையுடன் விநியோகித்து வருகின்றது.

மேலும் இவ் முன்னேற்றத்துக்கு எமது நுகர்வோர்களின் நம்பிக்கையே மூலகாரணம் என தெரிவித்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக நிறுவனத்தின் வருடாந்த விற்பனை போட்டியில் (Annual Sales Competition) வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களையும் நன்றியினையும் அந்நிறுவனத்தின் விற்பனை தலைமை அதிகாரி திரு.அனுருத்த மல்லிகாராச்சி (Mr.Annurudda Mallikarachi)   தெரிவித்துள்ளார். 


அதனடிப்படையில் 2019 - 2020 ஆண்டுக்கான மலிபன் பால்மா நிறுவனத்தின் விற்பனை ஊழியர்களின் போட்டியில் (Annual Sales Competition)  அகில இலங்கை ரீதியில் சிறந்த விநியோகஸ்தர் விருதை திருகோணமலையை சேர்ந்த திருகோணமலை மாவட்ட விநியோகஸ்தர் திரு.பவதீன் அப்துல் நஜீப் (Bavadeen Abdul Najeeb) அவர்களுக்கும் அகில இலங்கை ரீதியில் Regional Sales Manager போட்டியில் 01ஆம் இடத்தை வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான திரு.விஷ்வா மித்ர ஒப்பேத்தல்ல (Mr.Wishwamithra oppethella) அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் அகில இலங்கை ரீதியில் Business Development Manager போட்டியில் 01ஆம் இடத்தை வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான திரு. ஜகதீஸ்வரன் பிரதீபன் (Mr. Jagatheeswaran Pratheepan) அவர்களும் அகில இலங்கை ரீதியில் Area Sales Executive போட்டியில் 01ஆம் இடத்தை வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான திரு.பாக்கியம் கிரிதரன் (Mr. Pakkiyam Giritharan) அவர்களும் வெற்றி பெற்றுள்ளதுடன். 

மேலும் அகில இலங்கை ரீதியில் Sales Representative போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி சந்திரதாஸ் (K.Santhirathas) , மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கணேசன் நிலோஜன் (K.Nilojan) மற்றும் பதவிபராக்கிரமபுர பிரதேசத்தைச்சேர்ந்த சம்பத் சேனநாயக்க (Sampath Senanayake)  அவர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வெற்றி பணப்பரிசில்களும் வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் கோவிட் 19 கொரோனா தொற்றினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டிக்கு உள்நாட்டு நிறுவனம் சார்பில் IDH வைத்தியசாலைக்கு இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தேசிய தொற்று நோய் தடுப்புக்கான விசேட செயலணிக்கு சுமார் 10மில்லியன் ரூபா நன்கொடையாக கடந்த காலங்களில் இவ் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments