Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஹொரவ்பொத்தான-துடுவெவ பகுதியில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா!

 


(பதுர்தீன் சியானா)

ஹொரவ்பொத்தான -துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அசேல திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு-மோதர இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இவர் விடுமுறைக்காக கடந்த 9ஆம் திகதி வீட்டுக்கு வருகை தந்ததாகவும், இதனையடுத்து 10 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை  மேற் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்-இவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த 10ஆம் திகதி ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.




No comments