(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்குள் 67 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 06 நாட்களுக்குள் திருகோணமலை நகர் பகுதியில் 43 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் தம்பலகாமத்தில் ஒருவருக்கும் சேருவில பிரதேசத்தில் ஒருவருக்கும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் மொத்தமாக 67 பேர் இனங்கானபட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட முருகாபுரி, அபயபுர , துளசி புரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 846 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments