Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!


 (அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-பாலையூற்று பகுதியில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாழடைந்த விடுதிக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம் இன்று (03) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை,மஹமாயபுர,மட்கோ பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஏ. பீ. விஜயபால (67வயது) எனவும் தெரியவருகின்றது.

தனது தாயாருடன் வாழ்ந்துவரும் இவர் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று மாலை கடைக்கு சென்றதாகவும் இதனை அடுத்து வீட்டுக்கு இரவு வருகை தராத காரணத்தினால் அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தொலைபேசியை ஆன்சர் பண்ணவில்லை எனவும் தாயார் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை புகையிரத திணைக்களத்தில் கடமையாற்றி வரும் ஊழியர் ஒருவர் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாழடைந்த வீட்டுக்குள் தொலைபேசி அழைப்பு வரும் சத்தம் கேட்டதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆணொருவரின் சடலம் ஒன்று இருந்ததாகவும் இதனை அடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தெரியபடுத்தியதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சடலத்தை சட்டவைத்திய பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments