(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை-கல்யாணபுர பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (17) அதிகாலை 2.00மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல-கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிங் ஹாமிகே அசோக கருணாரத்ன (39வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் இவரை கல்யாணபுர சிங்கள மகா வித்தியாலயத்திற்கு ஆசிரியராக நியமித்துள்ள நிலையில் அவர் நேற்று காலை திங்கட்கிழமை முதல் இன்று அதிகாலை வரைக்கும் உயிரிழந்துள்ள நபரும் அவரது மச்சானும் வயலில் இரவு பகலாக வேலை செய்துக்கொண்டிருந்த நிலையில் வயலுக்குள் வைத்து பாம்பு கடித்ததாகவும் பின்னர் அவரை உழவு இயந்திரத்தில் வீட்டுக்கு கொண்டு வந்து அங்கிருந்து வாகனம் ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
No comments