(அப்துல்சலாம் யாசீம்)
அரசாங்கத்தினால் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட நியமனத்தை மீள் பரிசீலனை செய்து நிறுத்தப்பட்ட நியமனத்தை வழங்க வேண்டும் என
இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை-கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இன்று (29) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இக் கோரிக்கையை முன் வைத்தனர்.
அரசாங்கத்தினால் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனாலும் தேர்தல் காலங்களில் நியமனம் வழங்க முடியாது என வழங்கப்பட்ட நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டது.
இதேவேளை பின்னர் வழங்கப்பட்ட நியமனத்தில் வெளிநாட்டு
பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பல தடவைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று பேசிய போதிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை பரிசீலனை செய்து நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments