Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில்!

 


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை-மொரவெவ நாளாம் வாய்க்கால் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (29) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் தினேஷ்குமார் (28 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கத்திக்குத்துக்கு இலக்கான  இளைஞனின்  மாமியார் வீட்டுக்கு  என்டன் சுரேஷ்  என்பவர் வருகை தருவதாகவும் அவரை  வீட்டுக்கு வரவேண்டாம் என கூறியபோது தொடர்ச்சியாக வீட்டுக்கு வந்ததாகவும் இதனைையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும்் கத்திக்குத்துக்கு இலக்கானவர் தெரிவித்தார்.


அத்துடன் இன்று தனது மனைவியுடன் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றபோது கத்தியால் தன்னை குத்தியதாகவும் இதனையடுத்து அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் குறித்து விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments