Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் கவனிக்குமா?

 


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை பொது வைத்தியசாலையின்  நோயாளர்களை அனுமதிக்க செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியை  புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள இந்த வீதியினூடாக அதிக அளவிலான நோயாளர்களை ஏற்றிச் செல்வதாகும் கர்ப்பிணி பெண்கள் உட்பட தொய்வு ஏற்படும் நோயாளர்கள் மட்டுமல்லாது அனைத்து சிகிச்சைக்காகவும் செல்பவர்கள் இவ்வீதியின் ஊடாகவே சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


மழை காலங்களில் வெள்ள நீர் படிந்து நிற்பதுடன் நடந்து செல்பவர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதேவேளை மின்தூக்கி பொருத்துவதற்குரிய  குழிக்குள் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் இதன் ஊடாக டெங்கு பரவக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட நிர்வாகத்திடம் பலதடவைகள் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.



No comments