(பதுர்தீன் சியானா)
திருகோணமலைம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த பா.ரதிகரன் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குறித்த இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments