(அப்துல்சலாம் யாசீம்)
கொவிட் 19 தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் கிண்ணியா பிரதேசத்தில் விழிப்புனர்வூட்டும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் கொவிட் 19 தொற்று தொடர்பில் நகை மற்றும் புடவைக் கடை வியாபாரிகளுக்கு நேற்றைய தினம் அறிவுறுத்தல் வழங்கும் கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வியாபாரத்தில் ஈடுபடுமாறு வழியுறுத்தப்பட்டதோடு இல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டிருந்தார்..
அதற்கமைய இன்று முகக்கவசம் அணியாமல் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களை முகக் கவசம் அணிய வழியுறுத்தியதுடன் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
பொது இடங்களில் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார நடை முறைகளை பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் பரீசீலிக்கப்பட்டதோடு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் வழியுறுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வில் சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர்களும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸாரும் கலந்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
No comments