(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா -வான் எல பகுதியைச் சேர்ந்த சுக்கூர் றயான் ( 16 வயதுடைய )
குறித்த இளைஞர் சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ முகாமுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
No comments