Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ரொட்டவெவ பகுதியில் மலசல கூட குழிக்குள் இருந்து கேரளா கஞ்சா மீட்பு!


 திருகோணமலை-சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,மொரவெவ பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கேரளா கஞ்சாவை மலசல கூடத்தின் குழிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (10) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த நஸ்லிம் என்று அழைக்கப்படும்  ஜூனைதீன் சரூக் (38வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா விற்பனையில் முகவராக செயற்பட்டு வரும் பிரதான சந்தேகநபரான இவரின் வீட்டை சுற்றிவளைத்த போது இவரிடம் இருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும். விசேட பொலிஸ் அதிரடி படையினரை கண்டு விற்கப்பபடயிருந்த கேரள கஞ்சாவை அக்குளுக்குள் போட்ட நிலையில் அதனை பொலிசாரும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் மீட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் கஞ்சா மற்றும் ஹெரோயின் தொடர்பில் வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பிரதேசத்தில் இவர் முகவராக செயற்படுவதாகவும் தொலைபேசி மூலமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

No comments