திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதியவகை பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பத்து ரூபாய் விலைக்கு இப்பாக்கு பக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகளவில் மாணவர்கள் இதனை வாங்கி உண்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மொரவெவ பிரதேசத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எதிர்காலத்தில் முழு சிறுவர்களும் போதைப் பொருள் பாவிக்க கூடிய வகையில் சில்லறை கடைகளிளும் பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை கடந்த வருடத்தை விட இவ்வருடம் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments