Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஐக்கிய தேசிய கட்சி பொது முகாமையாளர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

(அப்துல்சலாம் யாசீம்)

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்ட முகாமையாளர் கந்தராஜா சதீஷன்  மொட்டு சின்னத்துடன்  இணைந்து கொண்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திருகோணமலை காரியாலயத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்  அவர் பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தான் திருகோணமலை மாவட்டத்தில் பொது முகாமையாளராக நியமனம் பெற்று வந்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் மக்கள் சார்பாக ஒருவரை கலம் இருக்குமாறு கூறியதை அடுத்து அவர்கள் அந்த கருத்தை நிறைவேற்ற வில்லை எனவும் அதனால் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறந்த சேவையாற்றி வருவதை அவதானித்து அவருடன் இன்றைய தினம் இணைந்து கொண்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் நோக்குடனேயே தான் இணைந்து கொண்டதாகவும் கந்தராஜா சதீஷன் இதன்போது குறிப்பிட்டார். 

No comments