Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சிறிய தந்தையால் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையாரை  தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயாருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற இருப்பதால் வீட்டில் இருக்கின்ற மூன்று அசுரர்களையும் பார்த்துக் கொள்வதற்காக வருகை தந்து சிறிய தந்தையார் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 


இந்நிலையில் சிறுமியின் சிறிய தந்தை கொழும்பு பிரதேசத்தில் தலைமறைவாகி இருக்கின்ற நிலையில் பொலிசார் அவரை தேடி வருவதாகவும் சிறுமியை சட்ட வைத்திய அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில்  தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments