(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு வயோதிபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.
12 வயது சிறுமி கடைக்குச் சென்றபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மொரவெவ பொலிஸார் 69 வயதுடைய கடை உரிமையாளரையும் 50 வயதுடைய நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரும் மஹதிவுல்வெவ - தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த கே. எம்.ஜினதாஷ (69வயது) மற்றும் ஏ. எச். ஏ. நிமால் ஜயவர்தன (50வயது) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments