கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தின் தலைவரின் அறிக்கை- கொட்டியாபுரப்பற்றுப்பகுதியில் வாழும் அன்பார்ந்த உறவுகளுக்கு எமது பிரதேசத்தில் வாழும் மக்களின் வறுமையைப்போக்கி அந்த மக்களுக்கு தொழில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதே நோக்கமாகும் மூதூரில் இருந்து வெருகல் வரையான எமது உறவுகளுக்கு உதவுவதே எமது நோக்கம்.
அந்த நோக்கத்தோடு வெளிநாடுகளில் வாழும் அதாவது இங்கிலாந்து,சுவீஸ்லாந்து,கனடா,பிரான்ஸ்,டென்மார்க்,நெதர்லாந்து,ஜெர்மனி,அவுஸ்ரேலியா,சுவிடன்,நோர்வே,அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் எமது கொட்டியாபுரப்பற்று உறவுகளை ஒன்றிணைத்து இந்த கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தை உருவாக்கியுள்ளேன்,
அந்த சில உறவுகளின் பங்களிப்பைக்கொண்டு சடுதியாக ஏற்ப்பட்ட கொரனா நோய் சூழ்நிலைமை காரணமாக மிகவும் கஸ்டப்பட்ட எமது கொட்டியாபுரப்பற்று உறவுகளான ஈச்சிலம்பற்று வெருகல் பகுதியான 11 கிராமங்களுக்கு ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம்(ரூபா 7,50,000) ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளை ஈச்சிலம்பற்று வெருகல் DS ஊடாக வழங்கியிருந்தோம்,
அந்த உதவி எமது அந்த பகுதியில் அன்றாடம் கஸ்டப்படும் உறவுகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது அதேபோல் எனது வேண்டுகோளை ஏற்று சுவீஸில் வசிக்கும் கந்தையா கோணேஸ்வரன் மல்லிகைத்தீவில் உள்ள சாரதா இல்லத்திற்க்கு நான்கு இலட்ச்சத்து முப்பதினாயிரம்(ரூபா 4,30,000) ரூபாய் பெறுமதியான கட்டிட திருத்த வேலைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தின் ஊடக வழங்கியிருந்தார் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன், அத்தோடு கொட்டியாபுரப்பற்று உறவுகளுக்காக இரு பெரும் திட்டங்கள் என்னால் வகுக்கப்பட்டுள்ளது அதாவது இரு பிரதேசங்களான மூதூர் பகுதிகளான ஐம்பது கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு தொழில்சாலையும் அத்தோடு ஈச்சிலம்பற்று வெருகல் பகுதியான பதினொரு கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு தொழில்சாலையும் உருவாக்கும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மிகவிரைவில் தொழில்சாலை திறக்கப்பட்டு அதில் எமது உறவுகளுக்கு வேலைவாய்ப்பும் தொழில்சாலை மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு ஏழை எளிய உறவுகளுக்கு வறுமையற்ற நிலமையை உருவாக்குவதே எமது நோக்கமாகும், எமது கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியம் சர்வதேசத்திலும் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் இந்த நிறுவனத்தின் ஊடாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக கொட்டியாபுரப்பற்றிலே வாழும் உறவுகளுக்கு இனமத வேறுபாடின்றி ஏழ்மையாக வாழும் உறவுகளுக்கு சேவையாற்றுவதுதான் எமது முக்கிய நோக்கம்.
இந்த நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பை இந்த ஒன்றியத்தின் தலைவர் என்ற முறையில் அனைவரிடமும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
அறிக்கை வெளியிட்டுள்ள கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தின் தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments