Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கந்தளாய் - அக்போகம பகுதியில் எட்டு பேர் தனிமைப்படுத்தலில்

திருகோணமலை மாவட்டத்தின் அக்போகம பிரதேசத்தில் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து அவரது குடும்ப அங்கத்தவர்கள் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேச செயலகத்தில் அக்போகம பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் அங்குள்ள நிலவரம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்  இன்று நடைபெற்றபோதே மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அவரோடு தொடர்புபட்ட முதலாம் மற்றும் இரண்டாம் தொடர்புடைய 50 பேரிற்கு pcr பரசீலனைக்கான இரத்த மாதிரிகள் இன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவை பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அக்போகம கிராமத்தில் 14 குடும்பங்களைச்சேர்ந்த 56 பேர் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.அத்துடன் குறித்த நபர் பயணித்த இடங்கள் மற்றும் ஏனைய தொடர்புகள் தொடர்புபட்ட விடயங்கள் தற்போது  பெறப்பட்டும் வருகின்றது.

No comments