திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலமொன்று நேற்றிரவு (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பில் மன உளைச்சல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலை - புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டிலக்சன் (21வயது) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று இடம் பெற உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments