ஜின்னா நகர் பகுதியில் தான் வளர்த்து வந்த நாயை தாக்கி காயப்படுத்தியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைபாட்டினை நேற்று (08) அதே பகுதியைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் எச். எம். ஹகீம் பதிவு செய்துள்ளார்.
தனது வீட்டில் பிள்ளையைப் போன்று வளர்த்து பராமரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 3, 00 மணியளவில் வீட்டுக்கு முன்னால் உரம் (பசலை) போடப்பட்டிருந்த நிலையில் அந்த உரத்தை திருட வந்த திருடன் நாய் கதறியதால் நாய்க்கு மண்வெட்டியால் தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் இம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயை தாக்கிய சந்தேக நபரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து நாய் தாக்கப்பட்டமை தொடர்பில் மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி எஸ். எச்.ஆர்.பியதர்ஷ சோதனை மேற்கொண்டபோது முன் மற்றும் பின் கால்கள் உடைந்து உள்ளதாகவும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தி கம்பி பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிருக வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
நாயை தாக்கிய சந்தேக நபர் தலைமறைவாகி நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
No comments