மல்லிகைத்தீவை பிறப்பிடமாக கொண்ட இலண்டனில் வசிக்கும் கந்தையா இராசநாயகம்,சுவீஸ்சில் வசிக்கும் கந்தையா கோணேஸ்வரன் ஆகிய தொழிலதிபர்களின் தயாரிப்பில்
ஜனாமோகேந்திரனின் இயக்கத்தில்
"ஒற்றைச்சிறகு" திரைப்படம் உருவாகி வருகிறது, ஓர் தேவதையின் ஒற்றைசிறகின் பயண வலியில் வென்ற தருணங்களை அழகாக எடுத்தியம்பும் கதை....
மூதூர்,வெருகல் பகுதியில் உருவாகும் முதல் திரைப்படம் எனும் பெருமையை இத்திரைப்படம் தட்டிச்செல்கிறது "ஒற்றைச்சிறகு",
மட்டகளப்பு,திருகோணமலை தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகிறது,பிரத்தியேகமாக இருபாடல்களும் ஒலிப்பதிவாகியுள்ளது,இப்படத்திற்கான இசை K.KISHANTH,படத்தொகுப்பு TJ RENUJAN,பின்னணி குரல்பதிவு "அ" கலையகம் (மட்டகளப்பு),கதைதொகுப்பு அகல்யா,கிருபா,மக்கள் தொடர்பு தவமுரளி,உதவி இயக்குனர் குஜேந்தன்,கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் ஜனாமோகேந்திரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்,
எந்த எதிர்பார்ப்புமின்றி தயாரிப்பிற்குதவிய கந்தையா இராசநாயகம்,கந்தையா கோணேஸ்வரன் போன்ற தயாரிப்பாளர்கள் சிறந்த தயாரிப்பாளர்களுக்கு உதாரணம் துணிந்து தயாரிப்புக்குதவியமைக்கு பாராட்டுக்கள்.
காத்திரமான நம்மவர் படைப்பாக வருவது உறுதி நம்மவர்களுக்கு நாமே கைகொடுக்க வேண்டும் இளைஞர்களின் கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
No comments