Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் இன்று 19ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் திருகோணமலை கிரீன் வீதி இலக்கம் 133/59 வசித்து வரும் டி. பத்மராசா (44 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில்  அப்பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் செலுத்துவதற்கு உறவினர்கள் பணத்தை வழங்கிய நிலையில் அவர் கவலையில் தூக்கில் தொங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments