Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

தமிழ் மக்களின் வாக்குகள் வீணாகி விடக்கூடாது- வெள்ளத்தம்பி சுரேஷ்

(அப்துல்சலாம் யாசீம்) 

 தமிழ் மக்களின் வாக்குகள் வீணாகி விடக்கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை பட்டணமும் சூழலும்  பிரதேச சபையின் கிளைத் தலைவர் வெள்ளத்தம்பி சுரேஷ் தெரிவித்தார்.

திருகோணமலையில்  இன்று (14) இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுடனான கூட்டம் இடம்பெற்ற நிலையில் இம்முறை தமிழரசுக்கட்சி வாக்குகளை அதிகரிப்பதற்கான உத்திகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

திருகோணமலை மாவட்டத்தில் அதிக தமிழ் வாக்குகள் கொண்ட இடமாக பட்டணமும் சூழலும் பிரதேசம் அமைந்துள்ளது இம்முறை தமிழ் மக்களின் வாக்குகள் பிரிந்து செல்லக் கூடாது அதனை நாங்கள் எவ்வாறான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்முறை அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார். 

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் கிளை தலைவர் எஸ், குகதாசன்  செயலாளர் டாக்டர் ஜெயா மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

No comments