Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலையில் உணவக உரிமையாளர்களுக்கு தண்டம்

திருகோணமலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியின்றி உணவகத்தை நடாத்தி சென்ற உணவக உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும், 14 நாட்களுக்கு கடையை மூடுமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் இன்று (11) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை  பிறப்பிக்கப்பட்டது. 

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பாலையூற்று சுகாதார பரிசோதகர் டி. தவராஜசேகர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் சுகாதாரத்தின் தரத்தை பேணாமல் சுகாதார வைத்திய பணிமனைக்கு தெரியாமல் உணவகங்களை நடாத்தி சென்ற உணவக உரிமையாளருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியின்றி உணவகத்தை நடாத்திய குற்றச்சாட்டுக்காக 15,ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், 14 நாட்களுக்கு கடையை மூடுமாறும் உத்தரவிடப்பட்டது. 

இதேவேளை இன்னுமொரு உணவகத்தை அனுமதிப்பத்திரமின்றி நடாத்தி சென்றமைக்கு 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் தொடர்ந்தும் உணவகத் நடாத்தி சென்றால் 06 மாத கால சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை செய்தார். 


 அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் உணவகங்களை தொடர்ந்தும் சோதனையிட்டு வருவதாகவும்  சுகாதார திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி செயற்படும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

No comments