Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இங்கிலாந்திலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள்!

சிறி லங்கன் விசேட விமான சேவைகள் மூலம், நேற்று
(4) 208 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இலங்கை வந்தவர்களில், ஒரு யுவதிக்கு கொவிட்19 அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளது.
இதனால் அக்குறித்த யுவதி கட்டுநாயக்கவிலிருந்து நேரடியாக, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உற்படுத்தியதாக விமான நிலைய விமான சேவைகள் தலைமை அதிகாரி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அரசின் விசேட நடவடிக்கை மூலம் நேற்று(4) பல்வேறு நாடுகளில் Covit-19 நெருக்கடிகளில் சிக்கித்தவித்த மாணவர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.

இதில் ஒரு பகுதியினர் நீர்கொழும்பு ஜெட்விங்,டொல்பின், வஸ்கடுவ சிட்ரஸ் மற்றும் ஒரு பகுதியினர் அயகம தொழில்நுற்ப கல்லூரிக்கும்  தனிமைபடுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மாணவர்கள் பலர் ஒருநாளைக்கு 7500/-ரூபாவை(40$) கட்டணமாக தனிமைபடுத்தப்படும் ஹோட்டல்களுக்கு  செலுத்துவதற்கு இணங்கி உள்ளனர்.

(ஜே.எப்.காமிலா பேகம்) 

No comments