Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

வீட்டுக்குள் நுழைய வந்த முதலை குழிக்குள் விழுந்தது!

திருகோணமலை-மொரவெவ 04ம் கண்டம் பகுதியில் முதலையொன்று மலசல கூட குழிக்குள் வீழ்ந்தது.
அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மொரவெவ பிரதேசத்தில் வாய்க்கால் ஓரத்தில் முதலைகள்  அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் இன்றைய தினம் வீட்டுக்குள் செல்ல முற்பட்ட முதலையை கலைத்த போது  பழைய மலசலகூட குழிக்குள் வீழ்ந்துள்ளதாகவும்  வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முதலையினை மீட்கும் பணியில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வனஜீவிகள் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.




No comments