(அப்துல்சலாம் யாசீம்)
இலங்கை மின்சார சபை ஊழியரொருவர் ஏணியிலிருந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (13) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர் புல்மோட்டை - 04ம் வட்டாரத்தைச் சேர்ந்த எம். ஐ. மசூர் (41வயது) எனவும் தெரியவருகின்றது.
மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில் அதனை திருத்துவதற்கு ஏணியில் ஏறிய போதே கால் தவறி விழுந்ததாகவும் இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை அவரது கால் உடைந்துள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
No comments