இந்த அரசாங்கம் இன்று நாட்டு மக்களை கோமா நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கொரோனா தொற்று இந்த நாட்டில் மட்டுமல்லாது முழு உலகத்திலும் அதிகரித்துக்கொண்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் சரியான தகவல்களை வழங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் விபரங்களை இரவிலும் குணம் அடைந்தவர்களின் விபரங்களை காலையிலும் வெளியிட்டு வருகின்றது எனவும் கொரோனா தொற்று இல்லாத நாடாக காட்டி தேர்தலை வைக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments