Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதியருக்கும் கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிவரும் பெண் தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வார்ட்டு அறையில் அவர் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன் அவருடன் பணியாற்றிய டாக்டர்கள், சக தாதியர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை கொலன்னாவ-சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

(ஜே. எம். காமிலா பேகம்) 

No comments