திருகோணமலை-சிறாஜ் நகர் பிரதேசத்தில் வீதியோரத்தில் உணவைத் தேடி அலையும் முதலையொன்றை பிடித்து வன விலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சிறாஜ் நகர் பகுதியில் உள்ள வீதியோரத்தில் உணவின்றி பசி காரணமாக முதலையொன்று இருப்பதாக தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அம்முதலையை வன விலங்கு அதிகாரிகள் பிடித்து கல்மெடியாவ குளத்துக்கு கொண்டு சென்று விட்டதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எட்டு அடி நீளமான முதலையெனவும் குறிப்பிடத்தக்கது.
No comments