திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (31) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல-பக்மீகம-புலிக்கண்டி குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபுறுபண்டாகே இரோஷன் சதுரங்க (32 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து திருகோணமலை 22வது படை முகாமிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் தற்பொழுது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
No comments