Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கூடாரத்தை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு



கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த  உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கான கூடாரத்தை காணவில்லை என கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இம்முறைப்பாட்டினை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இவ்வமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா இன்று (04) முறைப்பாடு செய்துள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த பட்டிருந்த நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் அமைப்பினர் தங்களது உறவுகளை தேடி அவர்களுக்காக போராட்டம் மேற்கொண்ட கூடாரத்தை அகற்றி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்து தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.







No comments