திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று (09) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் நேரத்தில் பொது மக்களின் வருகை அதிகரிக்கும் எனவும் பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகரசபை தலைவர் தெரிவித்தார்.
No comments