உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று-இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வெற்றிவேல் ஏறிம்ப ராஷா (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கடந்த 25ஆம் திகதி உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு சென்றபோது உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இவருடைய தலையில் காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் காயம் ஏற்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இவருடைய சடலத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூருல்லா பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம் பெறவுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
No comments