திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் குடிசையொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிண்ணியா-ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ். சதீஸ்வரன் (43 வயதுடைய) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தனது வீட்டுக்கு அருகில் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த போது இன்றைய தினம் வியாழக்கிழமை காலை சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் கிடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டார்.
சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments