Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சுவர் இடிந்து விழுந்து சிறுவன் மரணம்-மற்றுமொருவர் காயம்


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சகோதரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா, ஆலீம் வீதி, எம். எப். முகம்மது ஷான் கனி (04வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-   கலியினால் கட்டப்பட்டிருந்த பழைய வீட்டை சிறுவன் தட்டிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

குறித்து  மரணம் தொடர்பில் கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த இரண்டு வயதுடைய எம். எப். எம். அப்லத் என்ற  சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். 

மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments