ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைத்து இன்று (01) ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் பணிப்பாளர் தாரிக் ஹஸன், ஷாதிக் ஹஸன் ஆகியோரினால் இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
COVID 19 தொற்றால் திருகோணமலை மாவட்டத்தில் வருமானத்தை இழந்து கஸ்டப்படும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்படவுள்ளதாகவும், இதில் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் தமது உயிர்களை பணயம் வைத்துக் கொண்டு செயற்பட்டு வரும் சமூக தியாகிகள் என போற்றப்படும் ஊடகவியலாளர்களை இத்திட்டத்தினூடாக கௌரவிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட மூவினங்கயும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இப்பொதிகள் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதன் போது ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் இணைப்பாளர் ஏ. எல்.ஹமீட் மௌலவி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments