Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சஜித்தின் கேள்விகளை சரியாக உணர்ந்து செயற்பட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது-இம்ரான் மஹ்ரூப்

(கிண்ணியா ஏ. ஆர். எம். றிபாஸ்) 

இந்த அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக கொரோனா  நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை  - என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்

அவரது அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

கொரோனா  வைரஸ் நோய்  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30, 40, 50 என நோயாளிகள் இனங்காணப்பட்டு கொண்டிருக்கின்ற சூழல் நாட்டில் காணப்பட்டு கொண்டிருக்கின்றது. 


இந்த அரசாங்கமானது இந்த வைரசினுடைய தாக்கத்தின் விளைவுகளை விளங்காது செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் எப்படியாவது இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்றும், 2/3 தேர்தலில் பெரும்பான்மை எடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதலான கவனம் செலுத்தி கொண்டிருப்பதாகவும், 
இந்த வைரஸினுடைய  தாக்கத்தினை குறைக்கின்ற அல்லது அந்த வைரஸை அழிக்கும் செயற்பாடுகளில் அரசு  மிகக் குறைவான கவனம் செலுத்துவதாகவும் அவர்  தெரிவித்தார். 


ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா   பாராளுமன்றத்தில் கொரோனா சம்மந்தமான கேள்விக்கு   அரசாங்க தரப்பினர் அளித்த பதில்கள் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளதாகவும், அன்று அந்த கேள்விகளை சரியான முறையில் உணர்ந்து சரியாக செயல்பட்டிருந்தால் இந்த நாட்டிலே இவ்வாறான ஒரு பாரதூரமான சூழ்நிலை  உருவாகி இருக்காது  என தெரிவித்தார்

அத்துடன் முஸ்லிம்கள், சிறுபான்மையினர்  கொரோனா வைரஸை பரப்புவதாக ஒரு சில தனியார் ஊடகங்கள் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

No comments