Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தில் இரண்டுகுழந்தை உட்பட 8 பேர் பலி 1,000 பேர் பாதிப்பு சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதி!


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் இரண்டு குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே ஆர்ஆர் வெங்கடபுரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், அரிப்பு, கண் எரிச்சல் பொன்றவை ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் பொதுமக்களை மீட்பு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வாயுக்கசிவால் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆர்ஆர் வெங்கடபுரம் பகுதியில் இருந்து, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அந்த பகுதியில் வாசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.  சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இருப்பினும், எப்படி வாயுக்கசிவு ஏற்பட்டது என்பது குறித்து தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் காவஸல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவம் குறித்து விசாரித்த முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.  அனைவரும் முக கவசங்களையும் அணிந்திருந்தனர்.

ஆந்திர விஷவாயு பாதிப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி நிலைமை பற்றி கேட்டறிந்தார். விசாகப்பட்டினத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு தேவையான உதவி வழங்கும் என உறுதியளித்துள்ளார்.


விஷவாயு விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல உயிர்களை பலி கொண்ட விசாகப்பட்டினம் அருகே நடந்த விஷவாயு கசிவு விபத்து பற்றி அறிந்து வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  அனைவரது பாதுகாப்பிற்காகவும் மற்றும் காயமடைந்தோர் குணமடையவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவு நடந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபக்கம் இருக்கும் வேலையில், ஆந்திராவில் இப்படி ஒரு சம்பவம் நடத்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




கொரோனா வைரஸை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் இந்தியா மனிதநேயம் மற்றும் உலகின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது

புத்தர் தனது பயணத்தில் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்தார் புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது. 
இதற்கிடையே, சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் உலகெங்கிலும் உள்ள பௌத்த சங்கங்களின் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் விதமாக புத்த பூர்ணிமா விழாவை மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், புத்தர் பூர்ணிமா தினத்தன்று அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நிலைமை என்னவென்றால், புத்த பூர்ணிமா திட்டங்களில் என்னால் உடல் ரீதியாக பங்கேற்க முடியாது. கொண்டாட்டங்களில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இன்று நிலவும் சூழ்நிலைகள் எங்களை அனுமதிக்காது என்றார்.

ஒவ்வொரு வாழ்க்கையின் பிரச்சினைகளையும் குறைப்பதற்கான தகவல்களையும் தீர்மானமும் இந்தியாவின் கலாச்சாரத்தை வழிநடத்தியுள்ளன. புத்தர் இந்திய நாகரிகத்தையும் பாரம்பரியத்தையும் வளப்படுத்த பங்களித்தார். புத்தர் தனது சொந்த வெளிச்சமாக மாறியதுடன், தனது வாழ்க்கை பயணத்தில் மற்றவர்களின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்தார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், மற்றவர்களுக்கு உதவவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், தூய்மையை பராமரிக்கவும், தங்கள் சொந்த வசதிகளை தியாகம் செய்வதன் மூலம் 24 மணிநேரம் உழைக்கும் பல மக்கள் நம்மைச் சுற்றி உள்ளன. அத்தகைய மக்கள் அனைவரும் பாராட்டுக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்கள்.

இன்று, எந்தவொரு பாகுபாடும் இன்றி, தேவை உள்ளவர்கள் அல்லது சிக்கலில் உள்ளவர்கள், நாட்டில் அல்லது உலகம் முழுவதும் அனைவருக்கும் ஆதரவாக இந்தியா உறுதியாக நிற்கிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு உதவ இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும். சோர்வடைந்த பிறகு நிறுத்த எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இருக்க முடியாது. கொரோனா வைரஸை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். புத்தர் என்பது இந்தியாவின் உணர்தல் மற்றும் சுய உணர்தல் ஆகிய இரண்டின் சின்னமாகும். இந்த சுய உணர்தலுடன் இந்தியா மனிதநேயம் மற்றும் உலகின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும் இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது






No comments